திமுக இளைஞரணி மாநிலச் செயலாளரும் சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை விழா

Spread the love

திமுக இளைஞரணி மாநிலச் செயலாளரும் சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை வடக்கு மாவட்டம் மீனவர் அணி சார்பில் கேக் வெட்டி வழங்குதல் மற்றும் ஆயிரம் பேருக்கு பிரியாணி வழங்கும் விழா நிகழ்ச்சி சென்னை வட கிழக்கு மாவட்ட செயலாளரும் மாதவரம் சட்டமன்ற உறுப்பினருமான மாதவரம் எஸ் சுதர்சனம் தலைமையில் சென்னை விநாயகபுரம் அடுத்த சூரப்பட்டு மெயின் ரோடில் இந்திரா நகர் டேங்கு அருகில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை சென்னை வடக்கு மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் எஸ்.என். கோதண்டன் ஏற்பாட்டில் நடைபெற்றது. இதில் மாதவரம் தெற்கு பகுதி செயலாளர் ஜி. துக்காராம், 24 வது வட்ட செயலாளர் புத்தகரம் இ.ஏழுமலை, பகுதி துணைச் செயலாளர் சுந்தரம், துணைச் செயலாளர் சரவணன், பகுதி துணை செயலாளர் தேவி கௌதமன். மாவட்ட பிரதிநிதிகள் ரமணன், துரை ஸ்ரீராமுலு, அன்பழகன் மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் உடனிருந்தனர்.

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial