உலக சிலம்ப ஆசான்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒருங்கிணைந்த சங்கத்தின் செயற்குழு கூட்டம் சென்னை அசோக் நகரில் உள்ள என். ஆர். டி. டவர் கூட்டரங்கில் நடைபெற்றது சங்கத்தின் தலைவர்.என்.ஆர். தனபாலன் தலைமை தாங்கினார். அனைவரையும் சங்கத்தின் செயலாளர் பவர் பாண்டியன்ஆசான் வரவேற்றார்
கூட்டத்தில் விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் 3 சதவீத இட ஒதுக்கீட்டில் சிலம்பத்தையும் சேர்த்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் மத்திய அரசின் கேலோ
விளையாட்டு திட்டத்தில் சிலம்பத்தை சேர்த்த பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு கூட்டத்தின் வாயிலாக நன்றி தெரிவிக்கப்பட்டது.
மேலும் தேசிய அளவில் சிலம்பத்திற்கான பாடத்திட்டத்தை உருவாக்கி அதை அரசிடம் வழங்க வேண்டும். பல்கலைக்கழக விளையாட்டில் சிலம்பத்தை சேர்த்து அதன் மூலமாக கல்லூரிகளில் மாணவர்கள் சிலம்பம் ஆடும் வாய்ப்பை ஏற்படுத்தினால் அரசு வேலை வாய்ப்பு கிடைப்பதற்கு அதிக வாய்ப்பு உண்டு என்ற விபரத்தை அரசுக்கு வலியுறுத்துவது.
அனைத்து பள்ளிகளிலும் சிலம்பத்தை கட்டாய படமாக்க வேண்டும் என அரசை வலியுறுத்துவது.
டிசம்பர் மாதம் மாநில அளவில் அனைத்து ஆசான்கள் ஆசிரியர்களை வரவழைத்து சென்னையில் ஒரு கலந்தாய்வு மற்றும் பொதுக்குழு கூட்டத்தை நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
கூட்டத்தில் பொருளாளர் ராஜவேலு துணைத்தலைவர் முருகக் கனி துணை செயலாளர்கள் ராஜா. ஸ்ரீதர். உள்பட பலர் கலந்து கொண்டனர்.