மழை காலங்களில் பொதுமக்கள் நோய்கள் , மின்சார அபாயத்திலிருந்தும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என தமிழிசை சவுந்தராஜன் செய்தியாளர் சந்திப்பில் வேண்டுகோள் விடுத்தார்.
பா.ஜ.க வின் மாநில ஊடக பிரிவு தலைவர் பிரசாத் அவர்களின் தாயார் சாம்ராஜ்யம் (78) கடந்த ஒரு வாரம் முன்பு மறைந்தார். இதற்கு , புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்ரராஜன் சென்னை திரு.வி.க நகரில் உள்ள பிரசாத் இல்லத்திற்கு நேரில் வந்து ஆறுதல் தெரிவித்தார்.
பின்பு செய்தியாளர்களை சந்தித்த தமிழசை சவுந்தராஜன் ,
பொதுமக்களுக்கு என்னுடைய வேண்டுகோள். மழை காலங்களில் வைரஸ் , பாக்டிரியாவை கொண்ட நோய்கள் அதிகமாக வர வாய்ப்பு உள்ளது.
மின்சார சாதன பொருட்களால் அபாயங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆகவே அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
மழை காலங்களில் தேள் , பூராண் பூச்சுகள் வீட்டிற்கு உள்ளே வர அதிக வாய்ப்பு உள்ளது. அதனால் வீட்டை சுத்தமாக வைத்து கொண்டு பாதுகாப்பாக இருக்க வேண்டும்.