
புழலில் அமைந்துள்ள வெங்கடேஸ்வரா பப்ளிக் பள்ளியின் 25 ஆம் ஆண்டு விழா, நிறுவனர் தின விழா, புதிய கட்டிடம் திறப்பு விழா பள்ளி வளாகத்தில் வெங்கடேஸ்வரா பள்ளிக் குழும தாளாளர் அழகர்சாமி கண்ணன் தலைமையில் நடைபெற்றது. முதன்மை முதல்வர் உமா கண்ணன் வரவேற்புரையாற்றினார்.

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் மாதவரம் எஸ்.சுதர்சனம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றி, மாணாக்கர்களுக்கு விருதுகளை வழங்கி கௌரவித்தார்.
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உரையாற்றும் போது, இந்தக் கல்வி ஆண்டில் அரசு பள்ளிகளில் 2.5 இலட்சம் மாணாக்கர்கள் சேர்ந்துள்ளனர். இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் தன்னார்வலர்கள் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார். திருவள்ளூர் மாவட்டக் கல்வி அலுவலர் ஆறுமுகம், அம்பத்தூர் வட்டார கல்வி அலுவலர் செல்வகணபதி- உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.
இதில் பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நாடகங்கள் விழிப்பு உணர்வு நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. பள்ளி முதல்வர் ரேணுகா நன்றி நவில நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.