
செங்குன்றம் அருகே உள்ள வடகரை அரசு உயர்நிலை பள்ளியில் 1977 மற்றும் 1978ஆம் ஆண்டு படித்த மாணவர்கள். ஆசிரியர்கள் கூடுகை மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி செங்குன்றம் நெல் அரிசி மொத்த வியாபாரிகள் சங்க திருமண மண்டபத்தில் நடைபெற்றது முன்னாள் மாணவர்கள் பன்னீர்செல்வம் ராஜசேகர் முன்னிலை வகித்தனர் மாணவி கலையரசி வரவேற்றார் மாணவர் செல்வமணி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் 44 ஆண்டுகள் கடந்து வந்து அவர்கள் ஒன்று சேர்ந்து நடத்திய கலந்துரையாடல் நிகழ்ச்சி உணர்வுபூர்வமாக இருந்தது இதில் 55 மாணவ மாணவிகள் 11 ஆசிரிய. ஆசிரியைகள் கலந்து கொண்டனர் ஆசிரியர்
களுக்கும் மாணவர்
களுக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது இதில் மாணவர்கள் திருமால், பன்னீர், மணி, சேகர், சரவணன், வாசுதேவன், சோமசுந்தரம், ஏழுமலை, திராவிட வீரன், ரவிக்குமார், துளசி குபேரன், சரஸ்வதி, நிர்மலாதேவி, உட்பட பலர் கலந்து கொண்டனர்.