. திருவள்ளூர் மாவட்டம் வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மோரை ஊராட்சியில் “அடர்வனம்” அமைப்பதற்கான இடத்தை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியாளர் ஆல்பி ஜான் வர்கீஸ், பார்வையிட்டார். அடர்வனம் உருவாக்கும் செயல் முறைகள் குறித்து விரிவாக விளக்கினார். அப்போது இத்திட்டத்தினால் கிராமங்களில் இயற்கை சூழல் மற்றும் இயற்கை வனங்களை உருவாக்கி பருவமழை மற்றும் நிலத்தடி நீர் ஆதாரத்தை அதிகரிக்கலாம் என்று தேர்ந்தெடுக்கப்பட்ட இடத்தில் “அடர்வனத்தை” மோரை ஊராட்சி கிராம மக்களின் ஒத்துழைப்புடன் உருவாக்குவோம் என்று மோரை ஊராட்சி மன்ற தலைவர் ஆர். திவாகரன் கூறி, நன்றியை தெரிவித்துக் கொண்டார் . மேலும் மோரை ஊராட்சியில் மேற்கொள்ளப்பட வேண்டிய அடிப்படை கட்டமைப்பு வசதிகள் குறித்த (சாலை, குடிநீர் வினியோகம், கழிவுநீர் வடிகால், மழைநீர் வடிகால்) செய்து தரும்படி விரிவான கோரிக்கை மனுவை ஊராட்சி மன்ற தலைவர் ஆர் .திவாகரன் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியாளர் ஆல்பி ஜான் வர்கீஸ் இடம் கொடுத்தார்
உடன் உதவி செயற்பொறியாளர், சிவசங்கரி வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ), பாலசுப்பிரமணியம்.
வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ),
ஜோதி.
உதவி பொறியாளர், சுப்பிரமணியன்
உதவி பொறியாளர், அருள்
துணைத் தலைவர் கார்த்திக்
வார்டு உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர் உட்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.