பாடியநல்லூர் ஸ்ரீகாயத்ரி ஞானேந்திரர் சித்தர்கள்
பீடத்தில் பௌர்ணமி நாளை முன்னிட்டு
சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் வீ.எம்.ஜி பேலஸ் பின்புறம் ஈஸ்வரன் கோவில் தெருவில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீகாயத்ரி ஞானேந்திரர் சித்தர் பீடத்தில் உலக நன்மை வேண்டி
பௌர்ணமி நாளை முன்னிட்டு
சித்தர் அடியான்
ஜெ. பூபாலன் தலைமையில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு
காலையில் சிறப்பு யாகசாலை பூஜை நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து
மூலவர் சிவபெருமானுக்கு பால், தயிர், தேன் ,பன்னீர் போன்ற பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது
இதில் கலந்துகொண்ட
பக்தர்கள் அனைவரும் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய உச்சரித்தபடி சாமி தரிசனம் செய்து
நேற்று கடனைப் பூர்த்தி செய்தனர்.
இதில் பக்தர்கள் அவரவர் கோரிக்கையை ஏற்றார் போல் விபூதி குங்குமத்துடன் எலுமிச்சை கனி வழங்கப்பட்டது
முடிவில் வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் அறுசுவை உணவு அன்னதானமாக வழங்கப்பட்டது
ஆலயத் தொடர்புக்கு
Whatsapp no 9940344531 9566219548