சமூக நல ஆர்வலர்கள் கூட்டமைப்பு, நேதாஜி நகர் சுற்றுவட்டார குடியிருப்போர் நலச் சங்கம், பாடியநல்லூர் லயன்ஸ் சங்கம் – டிரஸ்ட், சங்கரா நேத்ராலயா இணைந்து கண் பரிசோதனை முகாமை பாடியநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட எம்.ஏ. நகரில் அமைந்துள்ள பர்மா தமிழர் தொண்டர் சங்கம் வளாகத்தில் கூட்டமைப்பு தலைவர் எஸ்கே.வரதராஜன் தலைமையில் நடைபெற்றது.
புழல் சரக உதவி ஆணையர் வெ.ஆதிமூலம், டாக்டர் கோபால், சில்ட்ரன்ஸ் பேரடைஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் ராஜன், எலைட் பள்ளிக்குழும முதன்மை நிர்வாக அதிகாரி பால் செபாஸ்டின் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண் பரிசோதனை முகாமை துவக்கி வைத்தனர்.
இந்நிகழ்வில் சமூக நல ஆர்வலர்கள் கூட்டமைப்பு செயலாளர் நண்பன் எம்.அபுபக்கர், மக்கள் தொடர்பு அதிகாரி மு.பீலிக்கான், சட்ட ஆலோசகர் வெங்கடபதி, நிர்வாகக் குழு உறுப்பினர்கள் ரமேஷ் பாபு, கோபிநாத், பிஜிஎம் நிர்மலா, மாலதி, சக்தி பாலாஜி, பாடியநல்லூர் லயன்ஸ் சங்கத் தலைவர் கா.ஷண்முக சுந்தரம், சாசனத் தலைவர் ஜி.பாலாஜி, செயலாளர் டாக்டர் எல்.வடிவேல், இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் முகம்மது இப்ராகிம், மாவட்டத் துணைத்தலைவர் கார்த்திகேயன், காரனோடை செல்வம், சுரேஷ், சோழவரம் எஸ்சி/ எஸ்டி பாபு, விஸ்வநாதன், கிருஷ்ணமூர்த்தி, பாடியநல்லூர் பாலைய்யா, காந்தி எஸ்.எம். சாமி, ரஜினிகாந்த், நேதாஜி நகர் சுற்றுவட்டார குடியிருப்போர் நலச் சங்கத் தலைவர் ராஜேந்திரன், செயலாளர் க.பா.சீனிவாசன், பொருளாளர் இளவரசன், துணைத்தலைவர் சேகர், சதாசிவம், அலங்காரம், பவானிநகர் சுற்றுவட்டார சமூக நல பாதுகாப்புக் குழு பொருளாளர் டெக்கரேட்டர் பி.சேகர் உள்ளிட்ட நிர்வாகிகள் உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
இதில் சங்கரா நேத்ராலயா மருத்துவக் குழுவைச் சேர்ந்த முத்து சரவணன், ஜெய் குழுவினர் 109 பேருக்கு கண் பரிசோதனை செய்தனர். 40க்கும் மேற்பட்டோருக்கு இலவச கண் கண்ணாடியும், 2000 முகக் கவசமும் வழங்கப்பட்டது.