
தமிழ்நாடு யோகாசன சங்கத்தின் நிறுவன பொதுச்செயலாளர் யோகிராஜ்,
நீ. ராமலிங்கம் ஆசிர்வாதத்துடன் உலக மக்கள் நோயிலிருந்து விடுபடவும் நோய் வராமல் தடுக்கவும் பிரபஞ்ச சக்தியுடன் பிரார்த்தனையுடன் சென்னை வடக்கு,
தெற்கு மாவட்ட யோகாசன சங்க தலைவர் மனோன்மணி நாராயணகுமார் தலைமையில் துணை தலைவர் வீ .முருகானந்தம் முன்னிலையில் ஏழாவது உலக யோகா தின விழா வில்லிவாக்கத்தில் உள்ள வட சென்னை யோகா சங்க அலுவலகத்தில் மாணவ, மாணவிகளுக்கு யோகா கலை நிகழ்ச்சியுடன் மிகவும் சிறப்பாக நடைபெற்றது
மேலும் இதே நாளில் வட சென்னை மேற்கு மற்றும் தென் சென்னையில் வாழும் 300க்கும் மேற்பட்ட யோகா சகோதரர்கள் தம் குடும்பத்தினருடன் கொரோனா காலம் என்பதால் அவரவர் வீட்டிலேயே யோகா பிராணாயாமம் தியானம் செய்து கூட்டு பிரார்த்தனையையும் ஈடுபட்டார்கள்
இவர்கள்
அனைவரும் சங்க செயலாளர் டீ .வி.
கே .மனோகர் இணைய வழியாக சூரிய நமஸ்காரம் யோகா பயிற்சி அளித்ததுடன் ஒருங்கிணைந்து செயல்பட வைத்தார்கள்
இவ்விழாவில் இணைச் செயலாளர்
ஆர் .பாலமுருகன் அனைவருக்கும் வரவேற்புரை கூறினார்
முடிவில் பொருளாளர் எஸ். அசோக்குமார் அனைவருக்கும் நன்றி உரை கூறினார்