செங்குன்றம் அடுத்த நல்லூர் ஊராட்சிக்குட்பட்ட ஆட்டந்தாங்கலில் அமைந்துள்ள ஸ்ரீகலைவாணி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, நல்லூர் முதல்நிலை ஊராட்சி, அலமாதி ஆரம்ப சுகாதார நிலையம், தமிழ்நாடு நர்சரி – பிரைமரி மெட்ரிக் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளின் சங்கம், சமூக நல ஆர்வலர்கள் கூட்டமைப்பு இணைந்து கொரோனா தடுப்பூசி முகாமை செங்குன்றம் அடுத்த நல்லூர் ஆட்டந்தாங்கல் ஸ்ரீகலைவாணி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தாளாளர் கணேசன் தலைமையில் நடைபெற்றது. பள்ளி செயலாளர் தேவசுதா, முதல்வர் தங்க மாரியப்பன், துணை முதல்வர் வாணி ஆகியோர் வரவேற்புரையாற்றினார்.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் இ.ஆ.ப. முகாமை பார்வையிட்டு துவக்கி வைத்தார்.
சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் மருத்துவர் ஜவஹர்லால், சோழவரம் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி, பூதூர் வட்டார மருத்துவ அலுவலர் ஜெயதீபா, சோழவரம் காவல் நிலைய ஆய்வாளர் நாகலிங்கம், நல்லூர் முதல்நிலை ஊராட்சி மன்றத் தலைவர் அமிர்வள்ளி டில்லி, துணைத்தலைவர் செல்வி பாலகிருஷ்ணன், ஊராட்சி செயலாளர் லோகநாதன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரவிசங்கர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
பள்ளிகளின் சங்கம் சார்பில் சில்ரன்ஸ் பேரடைஸ் தாளாளர் ராஜன், எலைட் பள்ளி முதன்மை நிர்வாக அதிகாரி பால் செபாஸ்டின், விவேகானந்தா பள்ளி தாளாளர் மணிவண்ணன், முதன்மை நிர்வாக அதிகாரி அருண்மொழிவர்மன், நேஷனல் லோட்டஸ் பள்ளி தாளாளர் அருணாச்சலம், பாடியநல்லூர் லயன்ஸ் சங்க தலைவர் பாலாஜி, செயலாளர் கா.ஷண்முக சுந்தரம் ஆகியேர் முன்னிலை வகித்தனர்.
சமூக நல ஆர்வலர்கள் கூட்டமைப்பு தலைவர் எஸ்கே. வரதராஜன், செயலாளர் நண்பன் எம்.அபூபக்கர், பொருளாளர் கே.குமரேசன், மக்கள் தொடர்பு அதிகாரி மு.பீலிக்கான், சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் வெங்கடபதி, கணக்கு தணிக்கையாளர் முருகானந்தம், நிர்வாக குழு உறுப்பினர்கள் ரமேஷ் பாபு, பிஜிஎம் நிர்மலா, லதா, மாலதி, கௌசிகா, ரீஹானா உள்ளிட்ட நிர்வாகிகள் தடுப்பூசி முகாமை மிகச் சிறப்பாக ஒருங்கிணைத்திருந்தனர்.