நேஷனல் லோட்டஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, செங்குன்றம் ஆரம்ப சுகாதார நிலையம், நாரவாரிக்குப்பம் பேரூராட்சி, தமிழ்நாடு நர்சரி – பிரைமரி மெட்ரிக் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளின் சங்கம், சமூக நல ஆர்வலர்கள் கூட்டமைப்பு, காமராஜ் நண்பர்கள் இணைந்து கொரோனா தடுப்பூசி முகாமை செங்குன்றம் காமராஜ் நகரில் அமைந்துள்ள நேஷனல் லோட்டஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பள்ளி தாளாளர் அருணாச்சலாம் தலைமையில் நடைபெற்றது
பேரூராட்சி முன்னாள் தலைவர் ஜி.ராஜேந்திரன், செங்குன்றம் ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவர் ஜோஸ்பின், காமராஜ் நகர் வழக்கறிஞர் ஜெ.ஜெய்மதன், சமூக ஆர்வலர் டாக்டர் ஆர்.முனுசாமி, சுகாதார ஆய்வாளர் ராஜ்குமார், பேரூராட்சி தூய்மை ஆய்வாளர் மதியழகன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு முகாமை துவக்கி வைத்தனர்.
சில்ரன்ஸ் பேரடைஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி செயலாளர் ராஜன், எலைட் பள்ளிக் குழுமம் முதன்மை நிர்வாக அதிகாரி பால் செபாஸ்டின், ஆல்ஃபா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இயக்குநர் ஜெரால்டு ஃபின்னி, கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் கணேசன், ஆயிஷா பள்ளி – இலாஹி பள்ளிகளின் தாளாளர் மௌலவி ஏ.காஜா மொய்னுத்தீன் ஜமாலி, விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதன்மை நிர்வாக அதிகாரி அருண், குட்வேர்ட் பப்ளிக் பள்ளி நிர்வாக அதிகாரி ஹிதாயத்துல்லாஹ், இயற்கை பாதுகாப்புக் குழு மாநில செயலாளர் இ.மாரியப்பன், பாடியநல்லூர் லயன்ஸ் சங்கத் தலைவர் பாலாஜி, காமராஜ் நண்பர்கள் எஸ்.கார்த்திக் கோட்டீஸ்வரன் ஆகியேர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்வில் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டனர்.
சமூக நல ஆர்வலர்கள் கூட்டமைப்பு தலைவர் எஸ்கே. வரதராஜன், செயலாளர் நண்பன் எம்.அபூபக்கர், பொருளாளர் கே.குமரேசன், மக்கள் தொடர்பு அதிகாரி மு.பீலிக்கான், இணைச் செயலாளர் கா.ஷண்முக சுந்தரம், சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் வெங்கடபதி, கணக்கு தணிக்கையாளர் முருகானந்தம், தகவல் தொழில்நுட்ப அதிகாரி மு.கோபிநாத், நிர்வாக குழு உறுப்பினர் ரமேஷ் பாபு, பிஜிஎம் நிர்மலா, மாலதி உள்ளிட்ட நிர்வாகிகள் தடுப்பூசி முகாமை மிகச் சிறப்பாக ஒருங்கிணைத்திருந்தனர்.
பள்ளிகளின் ஆசிரிய-ஆசிரியைகள் மிகச் சிறப்பாக பணியாற்றினர்.