

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் பாடியநல்லூர் ஊராட்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 100 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையம் திறப்பு விழா திமுக கட்சி சென்னை வடகிழக்கு மாவட்ட செயலாளரும் மாதவரம் சட்டமன்ற உறுப்பினருமான மாதவரம் எஸ்.சுதர்சனம் தலைமையில் திமுக சோழவரம் தெற்கு ஒன்றிய செயலாளரும் ஒன்றிய துணை தலைவருமான மீ.வே.கருணாகரன் முன்னிலையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பால்வளத்துறை அமைச்சர்
ஆவடி சா.மு.நாசர் மருத்துவமனையை திறந்து வைத்தார்
உடன் மாவட்ட ஆட்சியர் பொன்னையன்,
நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயகுமார், பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகர் ,மாவட்ட குழு தலைவர் உமா_மகேஸ்வரி சோழவரம் ஒன்றிய குழு தலைவர் ராஜாத்திசெல்வசேகரன், வட்டாட்சியர் மணிகண்டன்,
வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர்
சுரேஷ் மற்றும்
மருத்துவர்கள் சுகாதார துறை அதிகாரிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.