



திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியத்துக்குட்பட்ட விச்சூர் ஊராட்சியில் பொது முடக்கத்தால்
பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கும் முன் களப்பணி யாளர்களான துப்புரவு மற்றும் தூய்மை பணியாளர்கள் நலத்திட்ட
உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் எஸ். சங்கர் 500க்கும் மேற்பட்டோருக்கு உணவு மற்றும் குடிநீர் உள்ளிட்ட பல நலத்திட்ட உதவிகளை வழங்கினார்


இதில் பொதுமக்கள் மற்றும் முன் களப்பணியாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்
இந்த கொரோனா நோய் தொற்று
பொதுக்முடக்கம் காலம் முழுவதும் ஊராட்சி மக்களுக்கு தன்னால் இயன்ற அனைத்து நலப் உதவிகளை கொரோனாவிலிருந்து விடுபட அனைத்து பணிகளும் செயல்படுத்தப்படும் என ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.சங்கர் தெரிவித்தார்