


திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் அருள்மிகு முனீஸ்வரர் அங்காள பரமேஸ்வரி ஆலய விளையாட்டு திடலில்
அபி செலக்ட் கிரிக்கெட் குழு நடத்தும் ஐந்தாம் ஆண்டு மாபெரும் பகல் நேரம் பூப்பந்து கிரிக்கெட் போட்டி சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஒன்றிய செயலாளர் சோழவரம் ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு பி.கே.பாலன் தலைமையில் நடைபெற்றது .இதில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட இளைஞர் அணி இணைச் செயலாளர் கே. ஆர். வெங்கடேசன் இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இந்த விளையாட்டு போட்டியில் கலந்துகொண்ட அணிகளை அபி செலக்ட் மற்றும் நியூ ஸ்டார் ஃபிரண்ட்ஸ்
வரவேற்றார்கள். இந்த போட்டியில் சுற்றுவட்டார பகுதியிலுள்ள 16 அணிகள்
கலந்து கொண்டனர்.
முடிவில் வெற்றி பெற்ற அணிக்கு செங்குன்றம் எம்.4 காவல் நிலையத்தின் சார்பில் காவல்துறை அதிகாரிகள் பரிசுகளை வழங்கினார்.
இதில் முதல் இடத்தில்
வெற்றி பெற்ற முண்டி அம்மன் நகர் பி. எஸ். கே. கிரிக்கெட் அணி, இரண்டாம் இடத்தில் வெற்றிபெற்ற கிளாசிக் கவர் கிரிக்கெட் அணி, மூன்றாம் இடத்தில் வெற்றிபெற்ற அபி செலக்ட் கிரிக்கெட் அணிக்கு மெடல் மற்றும் கோப்பைகளை வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் உற்சாகத்துடன் வெற்றிபெற்ற அணியை ஊக்கப்படுத்தினார் கள், இதுபோன்ற பல்வேறு இளைஞர்களை ஊக்கப்படுத்தும் நிகழ்ச்சி தொடர்ந்து நடத்திவரும் பி.கே. பாலன் அவர்களை சுற்றுவட்டாரத்தில் உள்ள இளைஞர்கள் பெரிதும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்