திருவள்ளூவர் அறக்கட்டளை சார்பாக 21 பானைகள் ஏர் கலப்பை நெற்கதிர் வைத்து கிராமியப் பொங்கல் வைத்து கொண்டாட்டம்.
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே தீர்த்தங்கரையம்பட்டு பகுதியில் திருவள்ளுவர் அறக்கட்டளை சார்பாக 21 பானைகளில் 21 பெண்கள் மண்பானைகளில் பொங்கல், மண்வெட்டி, கலப்பை, நெற்கதிர்கள் வைத்து சூரியபகவானுக்கு படையல் இட்டு பொங்கல் வைத்து கொண்டாடினர்.
தமிழர் திருநாளான பொங்கலை முன்னிட்டு இந்த கிராமியப் பொங்கல் அறிவுக்கடல் அறக்கட்டளை தலைவரும் சைதை கூட்டுறவு சங்க துணைத் தலைவரும் முன்னாள் தீர்த்தங்கரைப்பட்டு ஊராட்சி மன்ற தலைவருமான கே.அந்தோணி முன்னிலையில் ஏற்பாடு செய்யப்பட்ட இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு இந்த கிராமிய பொங்கலை கொண்டாடினர்.
இதனையடுத்து மாலையில் நடைபெற்ற விழாவில் வரவேற்புரையை கதிரவன்பிரசாத் வழங்க அறக்கட்டளை செயலாளர் சூரியமூர்த்தி தலைமை தாங்கினார். இதில் பொங்கல் சிறப்புரையை எழுத்தாளர் வே.மதிமாறன் வழங்கினார் . அமமுக திருவள்ளூர் மத்திய மாவட்டசெயலாளர் எஸ்.வேதாசலம், தீர்த்தக்கரையம்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் கவிதா டேவிட்சன், சைதை வேளாண் கூட்டுறவு சங்க தலைவர் ரமேஷ் ராகவேந்திரா, செங்குன்றம் நெல் இடைத்தரகர்கள் சங்க தலைவர் ஏ.திராவிடமணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினாராகள். மேலும் இதில் அறக்கட்டளை உறுப்பினர்கள் ஆர்.ராஜா, ஜி.பார்த்திபன், ஆர்.ஸ்ரீதர், எஸ்.ஆல்பர்ட்பெஞ்சமின், டி.ஹரிநாராயணன், எஸ்.எம்.திலீப்ஆனந்த், ஆர்.வி.மகேந்திரன், வி.திவ்யசுந்தரி, எஸ்.தெய்வகன்னி, ஏ.புனிதா மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இறுதியில் விழா நன்றியுரை அறக்கட்டளை பொருளாளர் எம்.கிருபாகரன் வழங்கினார். இந்த பொங்கல் விழாவை முன்னிட்டு இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.