சோம்பட்டு மற்றும் ஞாயிறு ஆகிய இரண்டு கிராமங்களில்
அம்மா மினி கிளினிக் திறப்பு விழா
பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் சிறுணியம் பலராமன் தலைமையில் நடைபெற்றது
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த
பொன்னேரியில் இருவேறு இடங்களில் அம்மா மினி கிளினிக் திருவள்ளூர் மாவட்ட
ஆட்சியர் பொன்னையா அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சிறுணியம் பலராமன் ஆகியோர் திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர்.
தமிழகம் முழுவதும் 2000 அம்மா மினி கிளினிக் அமைக்க தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்
உத்தரவிட்டு இருந்தார்கள்
அதனடிப்படையில் #திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதிக்குட்பட்ட சோம்பட்டு மற்றும் ஞாயிறு ஆகிய இரண்டு கிராமங்களில் அம்மா மினி கிளினிக் அமைக்கப்பட்டு இதனை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பொன்னையா மற்றும் அதிமுக கட்சி வடக்கு மாவட்ட செயலாளரும் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினருமான சிறுணியம் பலராமன் திறந்து வைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர். அப்போது பேசிய சட்டமன்ற உறுப்பினர் சிறுணியம் பலராமன் இது போன்ற எண்ணற்ற திட்டங்கள் அதிமுக ஆட்சியில் மட்டுமே சாத்தியம் என்றும் மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தால் மேலும் பல்வேறு திட்டங்கள் தமிழகத்தில் செயல்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார் .
நிகழ்ச்சியில் மாவட்ட சுகாதாரத்துறை இணை செயலாளர் ஜவஹர்லால் பொன்னேரி கோட்டாட்சியர் செல்வம் ,
பொன்னேரி தாசில்தார் மணிகண்டன் உட்பட
பலர் கலந்து கொண்டனர்.