தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகும் ஒவ்வொரு படமும் பாக்ஸ் ஆபீசை குவிப்பதால் இவருக்கு ‘பாக்ஸ் ஆபீஸ் கிங்’ என்ற மற்றொரு பெயரும் உண்டு. மேலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகி பல மாதங்களுக்கு மேலாக ரிலீசுக்காக காத்திருக்கும் படம் தான் ‘மாஸ்டர்’.
இந்த நிலையில் தற்போது செய்தியாளர் சந்திப்பில் திரையரங்கு உரிமையாளர் சங்கத் தலைவர் சுப்ரமணியம் தளபதி விஜய்யை புகழ்ந்து பேசியிருக்கும் தகவல்கள் இணையத்தில் தீ போல் பரவி வருகிறது.
அதாவது கிட்டத்தட்ட எட்டு மாதங்களுக்கு மேலாக மூடியிருந்த திரையரங்குகள் கடந்த அக்டோபர் மாதம்தான் திறக்கப்பட்டன. எனினும் OTT தளங்களின் ஆதிக்கத்தாலும், கொரோனா பயத்தாலும் மக்கள் கூட்டம் இன்றுவரை திரையரங்குகளை நாடிச் செல்லவில்லை.
மேலும் பல நடிகர்கள் தங்களது படங்களை OTT வாயிலாக ரிலீஸ் செய்து கொண்டிருந்த போது கூட தளபதி விஜய் தனது படத்தை கட்டாயமாக திரையரங்கில் தான் ரிலீஸ் செய்ய வேண்டும் என்று ஆணித்தரமாக கூறியிருந்தார்.
இதனால் நம்பிக்கை இழந்த திரையரங்கு உரிமையாளர்கள் புத்துணர்வு பெற்றனர்.
அந்த வகையில் நேற்று செய்தியாளர் சந்திப்பில் பேட்டியளித்த திரையரங்க உரிமையாளர் சங்கத் தலைவரான சுப்பிரமணியம், ‘நடிகர் விஜய் போல் மற்ற நடிகர்கள் நினைத்திருந்தால் தியேட்டருக்கு இந்த மாதிரி ஒரு பிரச்சனை வந்திருக்காது. விஜய் போல எல்லா நடிகரும் சப்போர்ட் பண்ணிருந்தா தமிழ் சினிமா இப்போ வேற இடத்துக்கு போய் இருக்கும்’ என்று கூறியிருக்கிறார்.
அதேபோல், விஜய் மாஸ்டர் படம் ரிலீசான பிறகுதான் அடுத்த படத்திற்கான ஷூட்டிங்கிற்கு செல்ல இருக்கிறாராம். இதன்மூலம் திரையரங்கு மீது விஜய் எவ்வளவு மரியாதையும், அன்பும் வைத்திருக்கிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது என கூறுகிறார் சுப்ரமணியம்.
இறுதியாக பேசிய சுப்பிரமணியம், தமிழக முதல்வருக்கும், நடிகர் விஜய்க்கும் திரையரங்கு உரிமையாளர்களின் சங்கம் சார்பாக தனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்திருக்கிறார். இந்த தகவல்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு, தளபதி ரசிகர்களால் அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது