

சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு கூட்டமைப்பின் சார்பில் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுக்கு விழிப்புணர்வுட்டும் வகையில் விளக்கேந்தி விழிப்புணர்வு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தலைமையாக மாநில தலைவர் இளசை கணேசன், மாநில பொதுச் செயலாளர் கா.குரு ஆகியோர் தலைமை வகித்தனர். முன்னிலையாக தமிழன் வடிவேல் மாநில துணைத்தலைவர் (ஊடக உரிமைக் குரல் பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கம்), ஐஸ்வர்யன் மாநிலத் துணைத் தலைவர், ஜெகதீசன் மாநிலத் துணைத் தலைவர், தர்மராஜா மாநில துணைத்தலைவர், நாகராஜன் மாநில துணைச் செயலாளர், கன்னையா பொருளாளர்,சார்லஸ் செய்தி தொடர்பாளர் ஆகியோர் கலந்து கொண்டு இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னிலை வகித்தனர்.

இந்த விளக்கேந்தி விழிப்புணர்வு ஆர்ப்பாட்டத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான பத்திரிகையாளர்கள் அடையாள அட்டை பாரபட்சம் இன்றி புதுப்பித்தல் மற்றும் புதிதாக விண்ணப்பித்தோர் அனைவருக்கும் வழங்க வேண்டும், பத்திரிகையாளர் அடையாள அட்டை வழங்குவதில் உள்ள கடுமையான விதிமுறைகளை மாற்றி அமைக்க வேண்டும், Accrediction Card -Press Pass என்ற இரட்டை முறை ஒழிக்கப்பட்டு ஒரே அடையாள அட்டையாக வழங்க வேண்டும், பத்திரிகை துறையில் பணியாற்றம் அனைவரையும் நல வாரியத்தில் உறுப்பினராக சேர்க்க வேண்டும், பத்திரிகையாளர் நல வாரிய குழுவில் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு பத்திரிகையாளர் சங்கங்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் பத்திரிகையாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் குழு மற்றும் நல வாரிய குழுவில் பத்திரிகையாளர்கள் சங்கங்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்குவது சம்பந்தமாக அரசு விரைவில் கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த விளக்கேந்தி விழிப்புணர்வு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இந்த ஆர்ப்பாட்டத்தில் மாலை நியூஸ், நல்லாட்சி பத்திரிகையின் ஆசிரியரும் தமிழ்நாடு ஆல் மீடியா ஜெரலிஸ்ட் யூனியன் பொதுச் செயலாளருமான G.கதிர்வேல், துணை தலைவர் பெஞ்சமின், அயன்புரம் பாபு,மூர்த்தி, ஜுபிடர் ரவி, கவிஞர் சுமித்ரா, ரூபன் ,ராஜா முஹம்மது,தஞ்சை தமிழ் பித்தன்,ராஜீவ் காந்தி,தண்டபாணி, சோபன் பாபு கோபாலகிருஷ்ணன் மூர்த்தி என 200க்கும் மேற்பட்ட பத்திரிக்கையாளர் பல்வேறு பத்திரிகையாளர் சங்க நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு அரசுக்கு விழிப்புணர்வுட்டும் வகையில் விளக்கு என்று விழிப்புணர்வு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.