
மதரஸா – மஸ்ஜிதே அபுபக்கர் (ரலி), சென்னை சோசியல் லயன்ஸ் சங்கம், பிரசாந்த் மல்டி ஸ்பெலிட்டி மருத்துவமனை, எம்.என். கண் மருத்துவமனை, எழில் டயாபட்டிக் சென்டர் இணைந்து மாபெரும் இலவச இருதய பரிசோதனை, பொது மருத்துவ முகாம், கண் பரிசோதனை முகாமை செங்குன்றம் வ.உ.சி. தெருவில் அமைந்துள்ள மதரஸா – மஸ்ஜிதே அபுபக்கர் (ரலி) வளாகத்தில் நிர்வாகி அப்துல் மாலிக், ஹாபிழ் பஷீருத்தீன் தலைமையில் நடத்தியது.

வட்டாரத் தலைவர்கள் நண்பன் எம்.முகம்மது அபுபக்கர், கா.ஷண்முக சுந்தரம், முஹம்மத் கபூர் ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர்.

லயன்ஸ் மாவட்டச் செயலாளர் இரா.ஏ.பாபு, டாக்டர் கோபால், சென்னை சோசியல் லயன்ஸ் சங்கத் தலைவர் எம்.அன்சர் பாத்திமா, செயலாளர் ஏ.கே. முகம்மது யூசுப், பொருளாளர் பயாஸ் உசேன், துணைச் செயலாளர்கள் ஹனீஃபா, வேல்முருகன் (எ) விஜி, இயக்குநர்கள் மார்ட்டின், எஸ்.கோபி, சென்னை தமிழ்சிங்கம் லயன்ஸ் சங்கத் தலைவர் சென்னை மு.பீலிக்கான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாதவரம் சட்டமன்ற உறுப்பினரும் சென்னை வடகிழக்கு மாவட்டச் செயலாளருமான மாதவரம் எஸ்.சுதர்சனம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மருத்துவ முகாமை துவக்கி வைத்து மருந்து மாத்திரைகளை இலவசமாக வழங்கினார்.
இந்நிகழ்வில் செங்குன்றம் நகரச் செயலாளர் ஜி.ராஜேந்திரன், நாரவாரிக்குப்பம் பேரூராட்சித் தலைவர் கு.தமிழரசி குமார், பேரூர் கழக அவைத்தலைவர் டி.அருள்தேவநேசன், துணைச் செயலாளர்கள் ஆர்.சீனிவாசன், கே.கபிலன், எஸ்முனீஸ்வரி சுகுமார், பொருளாளர் என்.சந்திரசேகர், ஒன்றிய பிரதிநிதிகள் ஆர்எம்பி. குமார், என்எம்டி. இளங்கோவன், மாவட்ட அணிகளின் பொறுப்பாளர்கள் ஆர்இஆர். ராஜசேகர், எஸ்.கார்த்திக் கோட்டீஸ்வரன், கா.கு.இலக்கியன், முன்னாள் ஒன்றிய பிரதிநிதி ஏ.கோபால், கவுன்சிலர்கள் லதா கணேசன், வினோதினி பாலாஜி, கே.கே.ராமன், கழக முன்னோடிகள் வார்டு செயலாளர்கள் நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் இ.பாலசுப்பிரமணியம், வி.மதிவாணன், ஆர்இஆர். சூரியநாராயணன், என்.பாலாஜி, என்.அப்துல் சமது, எஸ்.வடிவேலு, கேஎல்என். லெனின்குமார், என்.ஷாம் கார்த்திக், டி.காஜா மொய்தீன், கே.கார்த்திக் ஜோதி, ஆர்இவி. சீனிவாசன், ஆர்.சுரேஷ், எம்.மகேந்திரன், ஆர்இவி. கிருஷ்ணகுமார், ஜெ.கருப்பு ஸ்ரீதர், பி.எம். அருண்ஜோதி, முருகன், ஆர்.ரவீந்தர், ஏழுமலை, வெங்கடேசன், பாபு, யு.தீனா, திருநாவுக்கரசு, மகளிர் அணி எம்.எஸ். புனிதவதி உள்ளிட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
125 பேருக்கு இலவசமாக உயரம், எடை, சர்க்கரை நோய் – இரத்த அழுத்தம், கொழுப்பு, கண் பரிசோதனையும் மருத்துவ ஆலோசனையும், ரூ. 1500 மதிப்புள்ள 3 மாதத்தில் சர்க்கரை நோயின் அளவு எவ்வளவு இருக்கிறது என்ற பரிசோதனையும் மருந்து மாத்திரைகளும் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.