சென்னை சோசியல் லயன்ஸ் சங்கம், ரெட்ஹில்ஸ் நண்பன் இதழ் இணைந்து வாரந்தோறும் 10 ரூபாய்க்கு சாப்பாடு

Spread the love

பொதுமக்களுக்கு இலவசமாக உணவை வழங்காமல், அனைவரும் சுயமரியாதையோடு உணவருந்த வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் சென்னை சோசியல் லயன்ஸ் சங்கம், ரெட்ஹில்ஸ் நண்பன் இதழ் இணைந்து 5வது வாரமாக வாரந்தோறும் 10 ரூபாய்க்கு சாப்பாடு வழங்கும் நிகழ்ச்சி சென்னை சோசியல் லயன்ஸ் சங்கத் தலைவர் எம்.அன்சர் பாத்திமா தலைமையில் செங்குன்றம் பேருந்து நிலையம் எதிரே நடைபெற்றது

செங்குன்றம் பேரூர் கழக திமுக துணைச் செயலாளரும் சென்னை சோசியல் லயன்ஸ் சங்கத்தின் துணைச் செயலாளருமான முனீஸ்வரி சுகுமார், செங்குன்றம் பேரூராட்சி 6வது வார்டு கவுன்சிலர் லீலாவதி சாந்தகுமார் ஆகியோர் 10 ரூபாய் சாப்பாட்டை பொதுமக்களுக்கு வழங்கினர்

வட்டாரத் தலைவரும் ரெட்ஹில்ஸ் நண்பன் இதழின் ஆசிரியருமான நண்பன் எம்.முகம்மது அபுபக்கர், சென்னை சோசியல் லயன்ஸ் சங்க பொருளாளர் பயாஸ் உசேன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் சென்னை சோசியல் லயன்ஸ் சங்க மார்க்கெட்டிங் கம்யூனிகேட்டர் எஸ்.ரமேஷ், அபு மெடிக்கல் முகைதீன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial