திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டம் பாடியநல்லூர் ஊராட்சி முத்துமாரியம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலயத்தில் ஏழாம் ஆண்டு ஆடித்திருவிழா கடந்த புதன்கிழமை அன்று தொடங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மூன்றாம் நாளான வெள்ளிக்கிழமை யான இன்று காலை 7 மணி அளவில் செங்குன்றம் திருவள்ளூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஆலமரம் ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயத்திலிருந்து பால்குடம், நீர் குடம் கங்கை நீராடி பக்தர்கள் ஸ்ரீ முத்துமாரி அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். இதில் முன்னாள் கவுன்சிலர் கே.கே.எஸ். பாஸ்கர் பால்குடம் ஏந்தி வந்து முத்துமாரி அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். பின்னர் மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது.
இதில் பக்தர்கள் கலந்து கொண்டு ஓம் சக்தி ஓம் சக்தி என்ற கோஷத்துடன் சாமி தரிசனம் செய்து இறையருள் பெற்று சென்றனர் .இதனைத் தொடர்ந்து இன்று மதியம் 12 மணி அளவில் முன்னாள் கவுன்சிலர் ஜி.ராஜேந்திரன் சார்பாக மாபெரும் அறுசுவை உணவு அன்னதானம் நடைபெற்றது.