செங்குன்றத்தில் உள்ள எலைட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஜனவரி 26 -ஆம் தேதி 72-வது குடியரசு தின விழாவினை முன்னிட்டு “பசுமைத் தடம்” என்ற நிகழ்வினை அதனுடைய முதன்மை நிர்வாக அதிகாரி திரு. பால் செபாஸ்டியன் அவர்களுடையத் தலைமையில் முன்னெடுத்தனர். குடியரசு தினத்தன்று காலை 8.30 மணி அளவில் கொடியேற்றத்துடன் துவங்கிய விழா மாலை 3.00 மணிவரையிலும் நடைபெற்றது.
அன்றைய நிகழ்வில் இன்னுயிர் காக்க இரத்ததான முகாம், நம் தமிழகத்தின் அடையாளங்களாகத் திகழும் நாட்டு மாடுகள், நாட்டு நாய்கள், நாட்டு கோழிகள் மற்றும் நாட்டு ஆடுகள் கண்காட்சி, இயற்கை விவசாயத்தின் மூலம் விளைவிக்கப்பட்ட நாட்டுக் காய்கறிகள் மற்றும் பழங்கள் அங்காடி & பாரம்பரிய உணவுகள் விற்பனையகம் போன்றவை இடம் பெற்றன. பெற்றோர்களுக்குக் கோலப்போட்டி மற்றும் நெருப்பில்லா சமையல் போட்டிகள் போன்றவை நடத்தி முதல் பரிசாக SMART PHONE வழங்கினர்.
அன்றைய தினத்தின் சிறப்பு நிகழ்வாக திருமதி வெற்றிசெல்வி அவர்கள் பங்கேற்று குழந்தை வளர்ப்பு மற்றும் உணவு முறைகள் பற்றிய தகவல்களை மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் பகிர்ந்து கொண்டார். நிகழ்வின் இறுதியாக நன்றியுரை நிர்வாக அதிகாரி திரு. பால் செபாஸ்டியன் அவர்கள் வழங்க இனிதே நிகழ்வு நிறைவுற்றது.
இந்த நிகழ்வில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.