சோழவரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட அருமந்தை ஊராட்சியில் மக்கள் நலப்பணி ஆய்வு மற்றும் பொதுமக்கள் குறை கேட்பு நிகழ்ச்சி அருமந்தை ஊராட்சி மன்ற தலைவர் சி.விக்ரமன் தலைமையில் நடை பெற்றது.
துணை தலைவர் கண்ணன் அனைவரையும் வரவேற்றார்.சமூக நலப்பணி பாதுகாப்பு வட்டாசியர் கார்த்திக்கேயன், துணை வட்டாசியர் வாசுதேவன், சோழவரம் ஒன்றிய அதிமுக செயலாளர் பி.கார்மேகம், கிராம நிர்வாக அலுவலர் வினோத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக பொன்னேரி சட்டமன்ற அதிமுக உறுப்பினர் சிறுணியம் பி.பலராமன் கலந்து கொண்டு ஊராட்சியில் மக்கள் நலப்பணிகளை ஆய்வு செய்து பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தனர்.பின்னர் முதியோர் உதவி தொகை, விதவை உதவி தொகை, வீட்டுமனை பட்டா, கிராம நத்த பட்டா, சாதி சான்று, வருமான வரி சான்று, வாரிசு சான்று போன்றவற்றை பெற்றிட. சான்றிதழ்களை பயனாளிகளுக்கு வழங்கி சிறப்புரையாற்றினர். இதில் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் சரஸ்வதி, லட்சுமி, பன்னீர்செல்வம், பாலு, விஜயா, ஊராட்சி செயலர் தனசேகர் உட்பட கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.