டாக்டர் ஏ.பி.ஜெ அப்துல் கலாம் 89 வது பிறந்த நாளை ஒட்டி கலாம் கனவு பாதை இயக்கத்தின் சார்பில் 1 கோடி மரக்கன்றுகள் நடும் துவக்க விழா நிகழ்ச்சி நிறுவனர் மாநில தலைவர் வழக்கறிஞர் ஆர்.எஸ்.கணேஷ் மற்றும் ஒரக்காடுஊராட்சி மன்ற தலைவர்சு. நீலா சுரேஷ் தலைமையில் ஒரக்காடு ஊராட்சியில் துவக்கி வைக்கப்பட்டது. இதில் கலாம் கனவு பாதை இயக்கத்தின் நிர்வாகிகள் மாநில பொதுச்செயலாளர் சி.எஸ்.அரவிந், சென்னை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்என்.எஸ்.கணேஷ், மாநில சமூக வலைத்தள ஒருங்கிணைப்பாளர்கு.ரமேஷ், திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செ.வினேத்குமார்,மற்றும் ஒரக்காடு ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் ர.லட்சுமணன் வார்டு உறுப்பினர்கள் புனிதா ,சோனியா காந்தி,ஷகிலா, நதியா, ஜெயசித்ரா, மற்றும் ஊராட்சி செயலர் கு.ரவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.