சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்றான புழல் ஏரியின் கரைகளை பலப்படுத்தும் விதமாகவும் பனையின் முக்கியத்துவத்தை பொதுமக்கள் அறியும் பொருட்டும் 8-10-2020 வியாழக்கிழமை இன்று காலை 7 மணி அளவில் நமது எலைட் பள்ளி குழுமம் காக்கை அறக்கட்டளை மற்றும் செங்குன்றம் புழல் ஏரி நடைபயிலும் சங்கம் இணைந்து முன்னெடுத்த பனை விதை நடவு விழா நடைபெற்றது. இது பனை நடவு நிகழ்வின் தொடர்ச்சியாக 7ஆம் நாள் நிகழ்வு ஆகும்.
இன்றைய நிகழ்விற்கு எலைட் பள்ளி குழுமத்தின் முதன்மை நிர்வாகி முனைவர் பால் செபஸ்டியன் அவர்களும் மற்றும் செங்குன்றம் புழல் ஏரி நடை பயில்வோர் சங்கத்தின் தலைவர் திரு. இரா ஏ பாபு அவர்களும் தலைமை தாங்கினார்கள். மேலும் இந்நிகழ்வில் செங்குன்றம் புழல் ஏரி நடை பயில்வோர் சங்கத்தின் சார்பாக த .பவானிசங்கர் (செயலாளர்) S .குமார் (பொருளாளர்) G .ராஜேந்திரன் D.கோபி (கெளரவ ஆலோசகர்கள்) R .சுரேஷ் செல்வம் J S கண்ணன் (துணை செயலாளர்கள்) R.செல்வகுமார் (ஒருங்கிணைப்பாளர்) மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் A.லோகநாதன் N. சந்திரசேகர் G.கண்ணன் P.செல்வம் ஆகியோரும் பங்கேற்றனர்
இன்றைய நிகழ்வில் 432 பனை விதைகள் நடவு செய்யப்பட்டன.