
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம் புழல் ஒன்றியம் தீர்த்தக் கிரைம்பட்டு ஊராட்சியில் கிராமசபா கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் கவிதா டேவிட்சன் தலைமையில் நடைபெற்றது.


இக்கூட்டத்தில் புதிதாக தார் சாலை, கழிவுநீர் கால்வாய், மின் விளக்கு, குடிநீர் வசதி உள்ளிட்ட பொது மக்களின் அடிப்படைத் தேவைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. பருவமழை துவங்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்காத வண்ணம் நடவடிக்கை எடுக்கவும் . ஊராட்சி பகுதியில் உள்ள கால்வாய்களை தூர்வாரி சுத்தப்படுத்தவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


இதில் புழல் ஊராட்சி ஒன்றிய குழு துணைப் பெருந்தலைவர் சாந்தி பாஸ்கரன், சமூக நலத்துறை அதிகாரி கௌரி, கிராம நிர்வாக அலுவலர், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் வேளாங்கண்ணி சரவணன், சாந்தி மூர்த்தி, நாகஜோதி வாசுதேவன், தரணிதரன், விமலநாதன், குசேலதாஸ் , கீதா வேல்முருகன், வளர்மதி ஈஸ்வரன், செயலர் யுகேஷ்குமார் மற்றும் அரசுத் துறை அதிகாரிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.