பிக்பாஸ் சீசன் 3 மூலம் பலரின் கவனத்திற்கும் பாத்திரமானவர் கவின். வாழ்வின் பல சோதனைகளை அவர் பொறுமையாக எதிர்கொண்டு வருகிறார் என்பதை அவரின் அமைதி சொல்லும்.
தற்போது அவரை மட்டுமல்லாது நாட்டிலுள்ள அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது உத்திரபிரதேச மாநிலத்தில் மனிஷா என்ற இளம் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்.
ஹத்ராஸ் பகுதியில் அப்பெண் நான்கு பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டடு நாக்கு அறுக்கப்பட்டு, முதுகெலும்பு உடைக்கப்பட்டு கோரமாக காயப்படுத்தப்பட்டுள்ளார்.
உயிருக்கு போராடி வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். அதே வேளையில் அப்பெண்ணின் உடலை பெற்றோர் சம்மதமில்லாமல் அவசர அவசரமாக போலிசார் தகனம் செய்ததாக கூறப்படுகிறது.
இதனால் நாடு முழுவதும் பெரும் விவகாரமாக இச்சம்பவம் உருவெடுத்துள்ளது.
இந்நிலையில் நடிகர் கவின் #JusticeForManishaValmiki என்ற டேக்கில் Twitter ல் சாவில் கூட நியாயம் இல்ல என ஆவேசத்துடன் பதிவிட்டுள்ளார்.