திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த வி.எம்.ஜி பேலஸ் பின்புறம் ஈஸ்வரன் கோவில் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீகாயத்ரி ஞானேந்திரர் சித்தர் பீடத்தில் சஷ்டி திருவிழா மூன்றாம் நாள் ஞாயிற்றுக் கிழமையான இன்று சித்தர்கள் அடியான் குருஜி ஜெ. பூபாலன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு மூலவர் முருகப்பெருமானுக்கு பால், தயிர், சந்தனம் போன்ற பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் மூலவர் முருகப்பெருமானுக்கு வெள்ளி கவசம் அணிந்து வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது இதனை தொடர்ந்து உற்சவர் முருகப்பெருமானுக்கு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மாட வீதி உலா நடைபெற்ற பின்னர் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் வந்திருந்த பக்தர்கள் அரோகரா அரோகரா என்ற உச்சரித்தபடி சாமி தரிசனம் செய்தனர் . முடிவில் வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது