விச்சூர் ஊராட்சி மன்ற தலைவர்
எஸ். ஷங்கருக்கு
48வது பிறந்தநாள் விழா, நலத்திட்ட உதவியுடன் நடைபெற்றது
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியத்துக்குட்பட்ட விச்சூர் ஊராட்சி மன்ற தலைவர்
எஸ். ஷங்கருக்கு 48வது பிறந்த நாள் விழா ஊராட்சி மன்ற அலுவலகத்தில்
நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு
திருவொற்றியூர் லயன்ஸ் சங்கத்தின் தலைவர் டி.வி. சுப்பிரமணி, பொருளாளர் முருகன், வெங்கடேஷ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு
விச்சூர் ஊராட்சி மன்ற தலைவர்
எஸ். ஷங்கருக்கு
மாலை மற்றும் சால்வை அணிவித்தும் , வாழ்த்துக்களை தெரிவித்தனர்,
இதனை தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவர் எஸ் .ஷங்கர் கேக் வெட்டி கொண்டாடினார்.
பின்னர்,ஏழை, எளிய மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவியுடன் ,முட்டை பிரியாணியுடன் இனிப்புகள் வழங்கினார்.
பின்னர் விச்சூர் ஊராட்சி மன்ற தலைவர் எஸ் .ஷங்கர்
செய்தியாளர்களிடம் கூறுகையில்
கொரோனா நோய்த்தொற்று காரணத்தினால் மிகவும் எளிமையான முறையில் என் பிறந்தநாள் விழா
கொண்டாடப்பட்டது
என்றார்
இதில்
எஸ்.சிவமணி, எஸ்.ஹரிகிருஷ்ணன், சி.கந்தன், ஆர்.நாகராஜ், எஸ்.என். சரண், எஸ்.முருகேசன், ஆர்.கே. கமல், என்.ஜமுனா, எம்.புஷ்பா, சி.மகேஷ், ஏ.மதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.