சித்ரா பௌர்ணமி
முன்னிட்டு
உலக நன்மை வேண்டி ஸ்ரீ காயத்ரி ஞானேந்திரர்
சித்தர் பீடத்தில் சிறப்பு வழிபாடு
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் வீ.எம்.ஜி பேலஸ் பின்புறம் ஈஸ்வரன் கோயில் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீகாயத்ரி ஞானேந்திரர்
சித்தர்கள் பீடத்தில் சித்திரை மாதம் சித்ரா பௌர்ணமி
முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் சித்தர் அடியான் குருஜி ஜெ.பூபாலன் தலைமையில் நடைபெற்றது.
முன்னதாக இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு மேளதாளங்கள் முழங்க சிறப்பு
யாகசாலை பூஜை நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து பக்தர்கள் பால்குடம் ஏந்தி பிரகார உலா வந்த பின்னர் பக்தர்கள் அவர்கள் கோரிக்கையை ஏற்றார் போல் சித்தர்களுக்கு பக்தர்கள் கைகளால்
அபிஷேகம்
நடைபெற்றது.
இதனை தொடர்ந்து மூலவர் சிவபெருமானுக்கு பால் தயிர் தேன் விபூதி பன்னீர் பஞ்சாமிர்தம் போன்ற பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் மூலவர் சிவபெருமானுக்கும் விநாயகர் ,முருகர், ஸ்ரீ காயத்ரி அம்மன் மற்றும் சித்தர்களுக்கும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது
இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவரும் முக கவசம் அணிந்து சமூக இடைவெளி கடைப்பிடித்து சாமி தரிசனம் செய்தும் அர்ச்சனை செய்தும் அகல் விளக்கு ஏற்றியும் நேற்றி கடனை பூர்த்தி செய்தனர்
இதனைத் தொடர்ந்து வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் விபூதி,குங்குமம், எலுமிச்சை கனியுடன்
பிரசாதப் பைகள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியின் நிறைவாக அறுசுவை உணவு அன்னதானமாக வழங்கப்பட்டது