நரேந்திர மோடி ஜி பிறந்தநாள் முன்னிட்டு பாஜக கட்சி சார்பில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் அம்பத்தூரில் நடைபெற்றது.
இதில் மாவட்டத் தலைவர் மனோகர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு 72க்கும் மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பு நியமனத்தை வழங்கினார். இதில் உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாவட்ட தலைவர் ராம்குமார். கல்வியாளர் பிரிவு பாண்டியராஜன் , மற்றும் பொதுச் செயலாளர் சுப்பிரமணிரெட்டியார், மண்டல் தலைவர் வினோத் ஆகியோர் இணைந்து இந்த வேலை வாய்ப்பு முகாமை வெகு சிறப்பாக நடத்தினர். இந்த முகாமில் பட்டப்படிப்பு மாணவர்கள் வேலை தேடும் இளைஞர்கள் கலந்து கொண்டு வேலைவாய்ப்பு நியமனத்தைப் பெற்றுக் கொண்டு. இந்த முகாமை நடத்தியவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்