கின்னஸ் சாதனை படைத்த பள்ளி மாணவி சக்தி பூரணிக்கு பாராட்டு!

Spread the love

திருவள்ளூர் மாவட்டம் பாடிய நல்லூர் பகுதியில் வசிக்கும் ஆசிரியர் முத்துராமலிங்கத் தின் ஒரே மகள் சக்தி பூரணி அங்குள்ள தனியார் பள்ளி யில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் சமீபத்தில் பய்ஸ்பைரல் ராப் என்ற விளையாட்டில் நிமிடத்திற்கு 77சுற்று சுற்றி கின்னஸ் சாதனை படைத்தார். அதற்கு கோகுல் மாஸ்டர் வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்துள்ளார்.
சக்தி பூரணிக்கு சி பா ஆதித்தனார் சிலம்ப கலைக்கூடம் சார்பில் பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. சிலம்ப கலைக்கூட தலைவர்.ஆர். முருககனி ஆசான். தேசிய சிலம்ப பயிற்சியாளர். எம்.ராஜா. யோகாசன ஆசான். ஜி.சுலைமான் சாதனை படைத்த சக்தி பூரணியை பாராட்டினர்.
சிலம்ப பயிற்சி யாளர்.சண்முக ஆசான்
பயிற்சி உதவியாளர்கள். கமலகண்ணன். கார்த்திக். நிஷாந்தி. வள்ளி. சாருமதி மற்றும் மாணவர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். உடல் ஆரோக்கியத்திற்கு சிலம்பம்.யோகாசனம் பயிற்சி மிகமிக அவசியம் என்று ஆசான்கள் வலியுறுத்தி பேசினர்.

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial