
லோட்டஸ் ஷைன் பள்ளி சார்பில் திருவள்ளூர் மாவட்டம் புழல் ஒன்றியம் புள்ளி லயன் ஊராட்சியில் லோட்டஸ் ஷைன் பள்ளியில்,


செங்குன்றம் லோட்டஸ் ஷைன் பள்ளியில் நடைபெற்ற அலமாதி அரசு பள்ளி மாணவர்கள் 20 பேருக்கு பெரிய புத்தகப்பை வேட்டைக்கார பழங்குடி மக்களுக்கு 30 பேருக்கு பெட்ஷீட் ஏழை எளிய மக்களுக்கு 15 பேருக்கு 5 கிலோ அரிசி 15 பெண்களுக்கு புடவை 3 பேருக்கு ஹெல்மெட் என பல்வேறு வகையான விலையில்லா இலவச பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.




பின்னர் லோட்டஸ் ஷைன் லைன்ஸ் கிளை புதிய அலுவலகம் திறப்பு விழா சர்வீஸ் சேர்மன் ஜெயச்சந்திரா தலைமையில் திறந்து வைக்கப்பட்டது . சங்கத்தின் முன்னாள் செயலாளர் முருகானந்தம் திருவுருவ புகைப்படத்திற்கு மலர் தூவி புகழஞ்சலி செலுத்தப்பட்டது.





இதில் தலைவர் அருணாச்சலம் செயலாளர் சரவண பாண்டியன் பொருளாளர் கே. குமரேசன் இயக்குனர் ஞாயிறு ஊராட்சி மன்ற தலைவர் ஜிவி. எல்லையன் கலந்து கொண்டனர்.மேலும் கவர்னர் முன்னிலையில் கே.புஷ்பராஜ், பாலாஜி, மருத்துவர் ஜோதிலிங்கம் உட்பட புதிய உறுப்பினர்கள் சங்கத்தின் இணைந்தவர்களுக்கு பேட்ச் வழங்கப்பட்டது. இதில் லைன்ஸ் வட்டார தலைவர் சண்முகசுந்தரம் பாடியநல்லூர் லைன் சங்கம் துணைச் செயலாளர் சிலம்பரசன், தமிழ் சிங்கம் லயன் சங்கம் செயலாளர் வரதராஜன் மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.